304views
சிங்கப்பூர் லயன்ஸ் சங்கத்தின் GST-CO Ln.S.Mohamed Rafick. CPIS மற்றும் பல பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் அவர்கள் தற்போது அமீரக பயணமாக 2 நாட்கள் அபுதாபி வருகை புரிந்திருக்கிறார்கள் அவர்களை நமது அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் கௌரவப்படுத்தும் விதமாக நேற்று 04-03-2022 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மாலை 7:00 மணி அளவில் அபுதாபியில் அமைந்துள்ள ஜைத்தூன் உணவகத்தில் (முன்னாள் செட்டிநாடு உணவகம் ) அய்மான் நிர்வாகிகள் சந்தித்து வரவேற்பு வழங்கினார்கள்.
மேலும் சந்திப்பில் அய்மான் சங்கம் செய்துவரும் சமூக பணிகளை விரிவாக கேட்டறிந்தார்கள் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அய்மான் சங்கம் செய்த அனைத்து மக்களுக்கான சமூக பணிகளை பாராட்டினார்கள்.
அதனைத் தொடர்ந்து அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள் அத்துடன் அய்மான் சங்கத்தின் துணைத்தலைவர் மதுக்கூர் Y. M. அப்துல்லா, பைத்துல்மால் பொதுச்செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், பொருளாளர் முகம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, அய்மான் சங்கத்தின் மார்க்கத் துறை செயலாளர் எஸ். எம்.பி. ஹுசைன் மக்கி மஹ்ழரி, செயற்குழு உறுப்பினர் கீழக்கரை முகம்மது பாசில், துணைப் பொருளாளர் பசுபதிகோவில் சாதிக்பாட்சா, செயற்குழு உறுப்பினர் அம்பகரத்தூர் முகம்மது கைசர், மற்றும் பலர் உடன் இருந்தனர்
மேலும் அவர்களுக்கு 26-02-2022 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






