விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை போட்டி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் துணை கேப்டன்: மிதாலி ராஜ்

82views

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர்தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி இரண்டு மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டார். ஹர்மன்பிரீத் கௌர் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவில்லை. எனினும், 5-வது ஆட்டத்துக்குத் திரும்பியபோது தீப்தி சர்மாவே துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால், துணை கேப்டன் குறித்த குழப்பம் எழுந்தது.

இந்த நிலையில் கேப்டன் மிதாலி ராஜ் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., கடைசி இரண்டு ஒருநாள் ஆட்டங்களுக்கு தீப்தி சர்மா துணை கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது தேர்வுக் குழுவினர் மற்றும் பிசிசிஐ முடிவு. உலகக் கோப்பைக்கு ஹர்மன்பிரீத் கௌர் துணை கேப்டன். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 6-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!