சினிமா

திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா.

130views
தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞரகளுக்கு விருது வழங்கும் விழா 100 அடி ரோடு விஜய் பார்க் ஹோட்டலில் நடந்தது. மாண்புமிகு நீதியரசர், முனைவர் எஸ். கே. கிருஷ்ணன் தலைமையில், கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் கே. பாக்கியராஜ், தேசிய விருது பெற்ற திரைப்படஇயக்குனர், முனைவர் ஞான ராஜசேகரன் முன்னிலையில் திரைப்பட கலைஞர் களுக்கு விருது வழங்கினார்கள்.மேலும் தேசிய சினிமா சேம்பர் சேவாரத்னா, முனைவர் அன்பு சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், “கலைமாமணி ” நெல்லை சுந்தரராஜனும் இணைந்து விருது வழங்கினார்கள்.
நடிகர், இயக்குனர் கே. பாக்கியராஜ் நேரமின்மையால் போக வேண்டியிருப்பதால் ஆரம்பத்திலே கே. பாக்யராஜுக்கு நீதியரசர் எஸ். கே. கிருஷ்ணன், முன்னிலை வகித்த திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன் அனைவரும் இணைந்து விருது வழங்கி வாழ்த்தினோர்கள். தொடர்ச்சியாக நடிகர்கள் சிறந்த நடிகர் ஜெய் ஆகாஸ், சிறந்த வில்லன் ஆரியன்,சிறந்த குணசித்திர நடிகர் ரமேஷ் கண்ணா, வாழ்நாள் சாதனை யாளர் பாபு கணேஷ், ,சிறந்த புதுமுக நடிகர் ரிஷி காந்த், நடிகைகள் சிறந்த கதாநாயகி சிறப்பு விருது இனியா,சிறந்த புதுமுக நாயகி அனுகிருஷ்ணா, மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களான சிறந்த திரைப்பட கம்பெனியான 2டி என்டர்டைன்மெண்ட் சார்பாக துணைத்தலைவர் மனோஜ் தாஸ், சிறந்த குடும்ப பட இயக்குனர் வி. சேகர், சிறந்த இசையமைப்பாளர் தீனா, சிறந்த எடிட்டர் கே. எல். பிரவின், சிறந்த ஒளிப்பதிவாளர் கே. எஸ்..செல்வராஜ், “சிவப்பு மழை “கின்னஸ் சாதனை ஒளிப்பதிவாளர் எஸ். ரவிமாறன் சிவன், சிறந்த கதாசிரியர் “கலைமாமணி “லியாகத் அலிகான், சிறந்த கதாசிரியர் சிறப்பு விருது வி. பிரபாகர், சிறந்த பின்னணி பாடகி ரெஹானா, சிறந்த ப்ரொடக் ஷன் கண்ட்ரோலர் சாமிநாதன், சிறந்த காஸ்ட்டிங் டைரக்டர் ( SIFCDCMA) தாரா உமேஷ், சிறந்த மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோருக்கு விருது வழங்கி வாழ்த்தினார்கள்.
இயக்குனர் வி. சேகர், நான் ” நீங்களும் ஹீரோ தான் ” இயக்கும் போது அதிக சம்பளம் வாங்கி கொண்டிருந்த கௌண்டமணி, செந்தில் போன்றவர்களிடம் பேசி, பேசி சம்பளத்தை குறைத்து எனக்கு உதவி செய்தவர் இந்த நெல்லை சுந்தர்ராஜன் தான். இது போல் ” நான் புடிச்ச மாப்பிள்ளை ” படத்திலும் நடிகைகள் சரண்யா, ஐஸ்வர்யா இருவரிடத்திலும் குறைந்த சம்பளம் பேசி அந்த படம் வெளியிட பெரும் உதவியா இருந்தார். இந்த “கொரோனா” காலகட்டத்தில் இப்படி ஒரு விழா பன்றது நெல்லை சுந்தரராஜன் ஒருவரால் மட்டுமே முடியும். இதே “கொரோனா ” செய்தியை தொடர்ந்து இசையமைப்பாளர் தீனா, ரமேஷ் கண்கண்ணா போன்ற கூறினார்கள்.
இந்த காலகட்டத்தில் விழா நடத்திய தேசிய விழா சேம்பர் முனைவர் அன்பு சுந்தரம், நம்ம நெல்லை சுந்தர்ராஜனுக்கும் எங்கள் பாராட்டுதலுடன் வாழ்த்துக்கள் என்று நீதியரசர் எஸ். கே. கிருஷ்ணன், திரைப்படம் இயக்குனர் ஞானராஜசேகரனும் ஒரு முகமாக வாழ்த்தினார்கள்.
விழா ஆரம்பத்தில் “க லைமாமணி ” நெல்லை சுந்தரராஜன் அறிமுக உறையும், தேசிய சினிமா சேம்பர் தலைவர் அன்பு சுந்தரம் வரவேற்புரையும் நிகழ்த்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!