கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது தொற்றின் பாதிப்பு, பாதிப்பு விகிதம், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் சேர்க்கை என எல்லாமே குறைந்துகொண்டே வருகிறது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் எனவும், கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடுவது பயனுள்ளதாக இருக்கும் எனவும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.