டில்லி உயர் நீதிமன்றத்துக்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின், ‘கொலீஜியம்’ பரிந்துரைத்துஉள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, கொலீஜியம் எனப்படும் நீதிபதிகள் குழு தேர்வு செய்து வருகிறது.டில்லி உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 60. ஆனால், தற்போது, 30 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஆறு பேரை, டில்லி உயர் நீதிமன்றநீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், தெலுங்கானா உயர் நீதிமன்றத்துக்கு 12 பேரையும், பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு ஒருவரையும் நீதிபதிகளாக நியமிக்க, கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.