விளையாட்டு

ரோகித் சர்மா தலைமையில் ‘நியூ லுக்’ இந்திய அணி- அஸ்வின் நீக்கம்

85views

2023 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் நோக்கத்துடன் சில புதுமுகங்களுக்கான வாய்ப்புகளுடன் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமைக்குத் திரும்பி விட்டார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த அணியில் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கத் திண்டாடி வருவதால் குல்தீப் யாதவ் வருகை பலமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் ஐபிஎல் புகழ் தீபக் ஹூடாவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் 3-0 என்று உதை வாங்கிய இந்திய அணியில் ஸ்பின்னர்கள் செகல், அஸ்வின், ஜெயந்த் யாதவ் 59 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையே கைப்பற்றினர். இதனையடுத்தே ராகுல் திராவிட் மிடில் ஓவர்கள் அதாவது 11-40 ஓவர்கள் காலக்கட்டத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பவுலர்கள் இல்லை என்பதே உண்மை. ஆனால் அதற்காக அஸ்வினை மட்டும் டிராப் செய்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை, ஆனால் அஸ்வினின் பவுலிங்கில் எந்த வித தாக்கமும் இல்லை என்பதே உண்மை.

எனவே கோலியின் வழியில் 2017-19-ல் இந்தியாவுக்கு வெற்றிகள் குவிந்ததற்குக் காரணமான குல்தீப், செகல் சேர்க்கைக்கு இந்திய அணி மீண்டும் திரும்பியுள்ளது. ரவி பிஷ்னோயும் அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளார். அதே போல் மூத்த பவுலர்கள் பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார் டி20 அணியில் மட்டும் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் அணியில் வெங்கடேஷ் அய்யர் இல்லை, ஆனால் டி20 செட்-அப்பில் இருக்கிறார்.

ஷர்துல் தாக்கூர், தீபக் சாகர் இரு வடிவங்களிலும் உள்ளனர். சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள், டி20- அணிகளில் இருக்கிறார். புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய ஒருநாள் அணி:

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயஸ் அய்யர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தீபக் சாகர், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், செகல்.

இந்திய டி20 அணி:

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், செகல்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!