இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ஒருவர் அதிரடி கைது

65views

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் கில்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டப்போது, தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனையடுத்து சுதாகரித்துக்கொண்ட இந்திய படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் இரண்டு பேர் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்கள் என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன. அவர்கள் சமீர் அகமது, சோபியான் மற்றும் ரயீஸ் அகமது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதியின் செயல்பாடுகள் பற்றி அறிந்த போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், அவந்திபோராவின் ரென்ஜிபோரா என்ற பகுதியை சேர்ந்த உமர் பரூக் பட் என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்து செய்தனர். அவரிடம் இருந்து, வெடிபொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டன..இவர் தான் பயங்கரவாதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!