விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது

61views

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி  களமிறங்கியது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது .இதனால் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வந்தது .பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்  இங்கிலாந்து 188 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது .

தொடர்ந்து ஆஸ்திரேலியா  தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியதால் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறியது. இதனால் ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.ஆஸ்திரேலியா  அணியின் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 49 ரன்கள் எடுத்தார்

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது .அந்த அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.முதல் விக்க்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர்.  பிறகு வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்  அந்த அணி 124 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 146 ரன்கள்  வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரையும் கைப்பற்றியது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!