சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் ’நாய்சேகர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் டீசர் உள்பட புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’நாய்சேகர்’ படத்தில் நடித்த செல்லப்பிராணிக்கு பின்னணி குரல் கொடுத்த பிரபல ஹீரோவுக்கு நன்றி தெரிவித்து சதீஷ் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
’நாய்சேகர்’ படத்தில் செல்லப் பிராணிக்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் சிவாவிற்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷ் ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், லிவிங்ஸ்டன், இளவரசு, ஞானசம்பந்தன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர்களின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கிஷோர் ராக்குமார் இயக்கி உள்ளார் என்பதும், அஜேஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவும் ராமபாண்டியன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.