நிகழ்வு

“கடல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு மீனவ மக்களுக்கு துணைபுரியும் என்ற நம்பிக்கை அளிக்கிறது” செயல்பாடுகளை முன்னெடுக்கும் நம் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் நம்பிக்கை

233views

இலங்கை கடற்படையின் அத்து மீறல்களை தடுத்து தமிழ்நாட்டு மீனவ பெருமக்களை காக்க வேண்டும் என இந்திய தென்பகுதி கடற்படை தலைவர்,  கடலோர காவல்படை தலைமை  ஆகியோரை  சந்தித்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை அரசின் அத்துமீறிய தாக்குதலில் இருந்து காப்பாற்றவும் நம்மவர்களின் மீன்பிடி உரிமையை கட்டிக் காப்பாற்றி தொழில் செய்ய இருக்கும் தடைகளை நீக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ( 29.12.2021) தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் கடல்சார் மக்கள் சங்கமத்தின் பிரவீன்குமார்பரதவர் மற்றும் தலைவர்கள் பொறுப்பாளர்களுடன் மீனவர் இயக்கத்தினர் வேண்டுகோள் கோரிக்கைவிடுத்துள்ளனர். .

1974 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் ஏற்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்தை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள் கடல் நீரோட்டம், காற்று, மழை போன்ற நேரங்களில் திசை மாறி இழுத்துச் செல்லும் போதும் அவர்களை தாங்கள் முன்னின்று காப்பாற்றி அழைத்து வரவேண்டும் எனவும் இப்பொழுது சிறை பட்டிருக்கும் மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதை வேளையில், மக்கள் தொகையிலும் கடல் எல்லை பரப்பிலும் அதிக பரப்பளவு கொண்ட கடலில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கே அதிக உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தி நடைமுறை படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒருங்கிணைந்து நடைமுறைப் படுத்துவதை நாங்கள் கண்டிப்பாக கடைப்பிடித்து நமது நாட்டு மீனவ மக்களின் பாதுகாப்பதே முக்கியம் மேலும் மீனவர்களிடம் இணக்கமாக இருப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

இதில் எல்.பிரவீன்குமார் பரதவர், பொது செயலாளர், கடல்சார் மக்கள் நல சங்கமம்; முனைவர் அயன்புரம் ஆ பாபு தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், திரு.கரு. சந்திரசேகர், தலைவர், உலகத் தமிழின வணிக பேரமைப்பு; வழக்கறிஞர் எம் எல் .இரவி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர்; திருமதி. சு.ரம்யா, தலைவர், மக்கள் சங்கமம்; வடசென்னை வர்த்தக பிரிவு செயலாளர் , திரு‌.புருசோதமன், செயலாளர் ம.ச; திரு.வேனு, செயலாளர், ஆதி மக்கள் கட்சி; சென்னை ஜெயராஜ்; கடல்சார் மக்கள் நல சங்கமம் செயலாளர்கள் ஏ ஜெபராஜ்; ஜெ ஏ ரொனால்ட், திரு.முருகன், தங்கராஜ் மற்றும் அமைப்பு நிர்வாகிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!