ஆந்திரா மாநிலம் அமராவதியில் பாஜக மாநில தலைவர் சோமு வீர்ராஜு தலைமையில் ஜெகன் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சோமு வீர்ராஜு பேசியதாவது:
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில், அமராவதியை ஜப்பான், சிங்கப்பூர், சீனா போன்று உருவாக்குவேன் என மக்களை ஏமாற்றினார். தற்போது ஜெகன் ஆட்சியில் ஆந்திராவிற்கு தலைநகரமே இல்லாமல் செய்து விட்டு, விசாகப்பட்டினத்தை தலைநகராக்கி, அதில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வளைக்கலாம் என திட்டம் போட்டுள்ளார். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று கட்சியான பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
சுமார் ஒரு கோடி பேர் ஆந்திராவில் ‘சீப் லிக்கர்’ (குறைந்த விலை மதுபானம்) உபயோகப்படுத்துகின்றனர். நாங்கள் (பாஜக) ஆட்சிக்கு வந்தால், முதலில் ‘சீப் லிக்கர்’ குவாட்டர் ரூ.70-க்கும், வருவாய் அதிகமாக வந்தால் அதே குவாட்டர் ரூ.50-க்கும் வழங்கப்படும். ஆதலால், அந்த ஒரு கோடி மக்களும் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும். மேலும் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இவரது பேச்சை ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பலர் கண்டித்துள்ளனர்.