91
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 29-ம் தேதி காலை 10.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் VPF கட்டணம். VPF கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
அயல்நாடுகளில் பெரும்பாலும் VPF கட்டணம் கிடையாது. இங்கு தயாரிப்பாளர்கள் மீது ஒரு சுமையாக செலுத்தப்பட்டு இந்த கட்டணத்தால் சிறுபட தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, VPF கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.
LBT (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்யவேண்டும் என்று அரசிடம் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரைத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உணர்வுள்ளவர்கள் இந்த ‘கவன ஈர்ப்பு’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பின் கௌரவ ஆலோசகர் T.ராஜேந்தர், தலைவர் உஷா ராஜேந்தர், செயலாளர் JSK சதீஷ்குமார், பொருளாளர் ஆல்பர்ட், துணைச் தலைவர் P.T.செல்வகுமார், இணைச் செயலாளர் சிகரம் R. சந்திரசேகர், நடிகர் இயக்குனர் பாபு கணேஷ் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.