சினிமா

வெளியீட்டுக்கு முன்பே ரூ 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா: தி ரைஸ்’

54views

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.

முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே ‘அலா வைகுந்தபுரமுலோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ‘புஷ்பா: தி ரைஸ்’ வெளியாகிறது. ‘அலா வைகுந்தபுரமுலோ’ வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக கூறப்படும் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

அணைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

‘புஷ்பா: தி ரைஸ்’, படத்தின் முன் வெளியீட்டு வணிகம் இன்னும் அதிமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளதால், உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் தடம் பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

‘புஷ்பா: தி ரைஸ்’ 2021-ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமாகும்.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து வரவிருக்கும் விளம்பரங்களுடன், ‘புஷ்பா’ பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!