நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போடும் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில் இந்த படத்தின் “சாமி சாமி” பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
சமீபத்தில் புஷ்பா படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போடும் லிரிக்கல்லி வீடியோ பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். தற்போது அந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே இழிவாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என கோரி சிலர் இதுகுறித்து ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.