சென்னையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பாகவும், பொதுப்பணித்துறை சார்பாகவும் பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைத்து வருகின்றன. சமீபத்தில் கட்டிமுடித்த வேளச்சேரி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மாநகராட்சி ஏற்கனவே கணேசபுரத்தில், ஓட்டேரியில் மற்றும் தி. நகர் உஸ்மான் சாலையில் என 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. இதற்காக 335 கோடி ரூபாயை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மூலம் பெற்று இந்த புதிய மேம்பாலகளை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கணேசபுரத்தில் 142 கோடி ரூபாயில் 680 மீ நீளமும் மற்றும் 15.20 மீ அகத்திற்கு 4 வழி சாலையாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதே போல் ஓட்டேரில் 62 கோடி ரூபாயில் 508 மீ நீளமும் மற்றும் 8.4 மீ அகத்திற்கு 2 வழி சாலையாகவும் தி. நகரில் 131 கோடி ரூபாயில் 1200 மீ நீளமும் மற்றும் 8.4 மீ அகத்திற்கு 2 வழி சாலையாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய பிறகு டெண்டர் விடப்படும் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.