விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா அணி வெற்றி

93views

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இன்று  நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா -நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில்   இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை .  தொடர்ந்து இரண்டாவது பாதியில் 81 வது  நிமிடத்தில் ஒடிசா அணியில் ஜோனதாஸ் டி ஜீசஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஒடிசா அணி 1-0 என முன்னிலை பெற்றது,

இதற்கு  பதிலடி  கொடுக்க எதிரணியால் கோல்  அடிக்க முடியவில்லை.இதனால் ஒடிசா அணி   1-0 என்று வெற்றி பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!