தமிழகம்

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

114views

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு சட்டபேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 07.09.2021 அன்று சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!