இந்தியா

32 முறை உருமாறிய ஓமிக்ரான்.. தடுப்பூசிக்கு கட்டுப்படுவது சந்தேகம்தான்.. எய்ம்ஸ் இயக்குநர்

92views

புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் 30 க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் புதியதொரு வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஓமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த வேரியண்ட் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வேரியண்டை விட மோசமானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது 32 முறை உருமாற்றம் பெற்றுள்ளது. இதுதான் மக்களின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. டெல்டா வைரஸே 8 முறைதான் உருமாற்றம் அடைந்தது. ஆனால் இது 32 முறை என்பதால் மிகவும் கொடிய வைரஸாகவே பார்க்கப்படுகிறது.

இது 32 முறை உருமாற்றமடைந்துள்ளதால் தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் போகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில் புதிய வைரஸானது 30க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளது. ஸ்பைக் புரதத்திற்கு எதிராக பல தடுப்பூசிகள் ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது, ஓமிக்ரான் பல முறை உருமாறியதால் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் திறனை அது குறைக்க வழிவகுக்கும்.

எனவே இந்தியாவில் உள்ள தடுப்பூசிகளின் திறனை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியமானது. இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் மூலம்தான் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாஸ்க் அணியுங்கள். அதை எப்போதும் கடைப்பிடியுங்கள். இரு தவணை தடுப்பூசிகளை போடுங்கள். இல்லாவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வாருங்கள் என்றார்.

இந்த வைரஸானது போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!