விளையாட்டு

இன்று கடைசி 20 ஓவர் போட்டி!! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

80views

இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஜெய்ப்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிலும், ராஞ்சியில் நடந்த 2வது ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நவம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது.

தற்போதைய காலநிலை காரணமாக இரவில் பனிப்பொழிவு மிக அதிகமாக உள்ளது. பனித்துளிகளால் பந்து ஈரமாகி விடுவதால் 2 வது ஆடும் அணிக்கே சாதகமாக அமையும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ‘டாஸ்’ ஜெயித்தாலே ஆட்டத்தை வெற்றி பெற்றது மாதிரி தான்.

இந்த மைதானத்தில் இதுவரை ஏழு சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா ஆடிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல் :

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹர் அல்லது அவேஷ்கான்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மன், கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், சோதி, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே, டிரென்ட் பவுல்ட் அல்லது பெர்குசன்.

இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!