சினிமாவிமர்சனம்

கடசீல பிரியாணி -திரை விமர்சனம்

354views
தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. படம் ஆரம்பித்ததும் ஏதோ சொல்லப்போகிறார்களோ என ஏகப்பட்ட ஆர்வத்துடன் ஸ்கிரீனை பார்க்க ஆரம்பிக்கும் கண்களுக்கு தெரியாது இது ஒரு மாமூலான கதை இல்லை அதையும் தாண்டி வேறமாதிரி என்று.
ஒரு குடும்பம் . ஒரு அப்பா மூன்று பையன்கள். இன்னொரு குடும்பத்தை சேர்ந்தவர்களால் தன் அப்பாவை இழக்க நேரிடுகிறது. இதற்கு பழிக்கு பழிவாங்க துடிக்கும் குடும்பத்தில் இரண்டு அண்ணன்களையும் பலிகொடுக்க வேண்டியதாகிறது. மீதம் இருக்கும் பையன் எதிரி குடும்பத்தில் இருப்பவர்களை அழிக்கிறானா என்பதுதான் மீதி கதை.
தெளிவான திரைக்கதையுடன் படம் போகிறது எனபது ஒரு ஆறுதல்.
புதுமுக இயக்குநர் நிஷாந்த் கலிதிண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரத் திரைப்படங்கள், இசை ஆல்பங்களை இயக்கியதில் கிடைத்த அனுபவத்தைப் வைத்து ‘கடசீல பிரியாணி’ மூலம் திரைப்பட இயக்குநராக நிஷாந்த் கலிதிண்டி அறிமுகமாகிறார்.
மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் தயாரிப்பு நிறுவனம் புதுப்படைப்பாளிகளுடன் களம் இறங்கி இருக்கிறது.
ஒளிப்பதிவு சுமார் பாராட்டலம். படத்தொகுப்பு கதையுடன் ஒன்றி செய்லபடுவது சாமர்த்தியம்.
இயக்குனர் இன்னும் வலுவான கதையுடன் கோடம்பாக்கத்து கதவுகளை பலமாக தட்டி இருக்கலாம்.
கடசீல பிரியாணி கொஞ்சம் சூடு கம்மிதான்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!