உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகின் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்தன.
அத்துடன் சர்வதேச பயணத்திற்கு தடை விதித்தது.
அந்த வகையில் சிங்கப்பூரிலும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடுப்பூசிஅவசியம் என அறிவித்துள்ளது. அத்துடன் தனிமைப்படுத்தலை தவிர்ப்பதற்காக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கான பயணப் பாதையை அமைத்துள்ளது.
மற்ற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என சிங்கப்பூர் பயணிகள் விமான ஆணையம் அறிவித்துள்ளது .
இந்த புதிய நடைமுறை நவம்பர் 29 முதல் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்கள் டிசம்பர் 6 முதல் அனுமதிக்கப்படுவர். எனினும், சர்வதேச பயணிகள் 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.