விளையாட்டு

புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து

78views

ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.

அத்துடன் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது. இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலக கோப்பையிலும் இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து முன்னேறியது. ஆட்டம் டை ஆனதுடன், சூப்பர் ஓவரும் டை ஆனது. அதனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்திடம் கோப்பையை பறி கொடுத்தது. கூடவே இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த முதல் டெஸ்ட் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் நியூசிலாந்து விளையாடியது. அதில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இப்போது டி20 உலக கோப்பையிலும் நியூசிலாந்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அதன் மூலம் கிரிக்கெட்டின் 3விதமான போட்டிகளிலும் தொடர்ந்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி அணி புதிய வரலாறு படைத்துள்ளது. வருங்காலத்தில் எந்தஅணியாவது இந்த சாதனையை செய்தாலும், முதல் அணி என்ற பெருமை எப்போதும் நியூசிலாந்துக்குதான் சொந்தமாக இருக்கும். அதற்கு காரணமாக இருந்த டாரியல் மிட்செல், ஜேம்ஸ் நீஷமுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!