சினிமா

இந்த நடிகையுடன் சேர்ந்து நான் நடிக்கமாட்டேன் – விஜய்சேதுபதி திட்டவட்டம்..!!

84views

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர், தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார்.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருக்கும் போதிலும், தமிழில் தொடர்ச்சியாக குணச்சித்திர கதாப் பாத்திரங்களிலும் நடித்துவருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். எனவே, ஆண்டு முழுவதும் விஜய் சேதுபதி மிகவும் பிஸியாக இருந்துவருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி, ‘உப்பெண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். இவரை ஒரு தமிழ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது.

“எனக்கு மகளாக நடித்தவருடன் ஜோடி சேரமாட்டேன்” என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் விஜய் சேதுபதி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!