விளையாட்டு

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார் ராகுல் டிராவிட்!

86views

இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் கோலிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இந்த இருவர் கூட்டணி பெரிய ஐசிசி கோப்பைகளை வெல்லாவிட்டாலும், பல சீரிஸ்களில் பல சம்பவங்களைச் செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தலைசிறந்த கேப்டன் தோனி அடித்தளம் போட்டுக்கொடுத்து விட்டு போக இவர்கள் இருவருமே அதனை மேலும் மெருகேற்றினர். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்ற பின் அவரை பதவி விலகக்கோரி கலகக்குரல் எழுந்தது.

இச்சூழலில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி தான் தேவைக்கு மேலே சாதித்துவிட்டதாகவும் இதற்கு மேலும் இந்திய பயிற்சியாளராக நீடிக்க விருப்பமில்லை எனவும் நேரடியாகவே கூறிவிட்டார். அப்போதே அவர் விலகுவது உறுதியானது. பயிற்சியாளரின் அதிகபட்ச வயதுவரம்பு 60 வயது வரை மட்டுமே. ரவி சாஸ்திரிக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. அவர் விலகியதற்கு இதுவும் ஒரு காரணம். எது எப்படியோ 2017ஆம் ஆண்டு பயிற்சியாளராக ஆரம்பித்த அவரது பயணம் டி20 உலகக்கோப்பையோடு முடிவுக்கு வருகிறது. அந்தப் பொறுப்புக்கு முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் வரவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வந்த வண்ணமே இருந்தன.

பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகுல் டிராவிட் உள்ளார். இவர் தலைமையின் கீழ் தான் இன்று ஐபிஎல் போட்டிகளில் கோலோச்சும் இஷான் கிஷான், பிரித்வி ஷா, பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் வளர்ந்து வந்தனர். இதனால் இவரது வருகை இந்திய அணிக்கு உற்சாகமளிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இச்சூழலில் அவர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!