இந்தியா

ஊழல் குறித்து புகார் கூறியதால் தன் பதவி பறிபோனதாக முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு..!!

53views

கோவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தற்போது மேகாலயா ஆளுநராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்து இருக்கும் நேர்காணலில், பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

குறிப்பாக கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தை ஊழல்வாதி என விமர்சித்துள்ள அவர், கொரோனா பெருந்தொற்றை தவறாக கையாண்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கோவா மாநில அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழல் மிகுந்திருப்பதாகவும் குறிப்பாக கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை அளிக்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரேஷன் பொருட்கள் ஊழல் குறித்து பிரதமரிடம் புகார் கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே பிரதமர் விசாரணை மேற்கொண்டதாகவும் மாலிக் கூறியுள்ளார்.

ஆனால் புகார் கூறிய தன்னை ஆளுநர் பதவி இருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிரமோத் சாவந்தை பதவியில் தொடர பாஜக அனுமதித்துள்ளதாகவும் சாடி உள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!