சினிமா

சினேகனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்த இளையராஜா

64views

கவிஞரும், நடிகருமான சினேகன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகா ரவியை ஜூலை 29 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் முன்நின்று நடத்தி வைத்தார்.திருமணத்தில் பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

இந்நிலையில் சினேகன் , கன்னிகா திருமணத்தில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துக்கொள்ள முடியாத காரணத்தால், இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் சினேகனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த சினேகன் ‘எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் எங்களை நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து தன் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!