உலகம்

பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை..! பிரபல நாட்டில் புதிய திட்டம். வெளியான முக்கிய தகவல்..!

73views

சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருகிறது. அதாவது குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு சீனாவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய வகுப்புகளும், குழந்தைகளுடைய தவறான செயல்களுக்கு பெற்றோரை பொறுப்பாக்குதல் முதலிய வகுப்புகளும் நடைபெறும். மேலும் இந்த புதிய சட்டம் குழந்தைகளின் பாதுகாவலருக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சட்ட முன்வடிவை நாடாளுமன்ற நிலைக் குழு விரைவில் ஆய்வு செய்ய உள்ளது.

அந்த வகையில் இந்த சட்டம் குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவு செய்ய வேண்டும், உடற்பயிற்சி செய்தல், விளையாடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. அதேபோல் சீன கல்வித் துறை அமைச்சகம் சமீபத்தில் சிறுவர்கள் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட வார இறுதி நாட்களில் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை கொண்டு வந்துள்ளது. அதாவது சீன அரசு மாணவர்களின் கல்வி சுமையை குறைக்க இந்த புதிய திட்டத்தினை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!