தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது இந்த தீபாவளி. சிங்கப்பூரில் இந்தியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இடம் ‘லிட்டில் இந்தியா’ . இப்பகுதியில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க சிங்கப்பூர் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
‘லிட்டில் இந்தியா’ வில் இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருவதாலும், இந்திய வகை உணவு கடைகள் பெருமளவில் இருப்பதாலும் இப்பபகுதி லிட்டில் இந்தியா என அழைக்கப் படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் இதை கண்டுகளிக்கவே மிகுந்த ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். இப்பகுதியில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெருக்களில் ஷாப்பிங், இரவு நேர கடைகள், இந்திய வகை உணவு விடுதிகள் என வண்ணமயமாக காட்சி அளிக்கும்.
உலகம் முழுவதும் நிலவி வரும் கொரோனா அச்சம் காரணமாக கொண்டாட்டங்களுக்கு ஒரேயடியாக தடை விதிக்காமல் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி இரவு நேர பஜார் கடைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்பகுதியில் உள்ள உணவுக் கடைகள், ஹெரிடேஜ் சுற்றுலா, உணவுத் திருவிழாக்கள், சாசக விளையாட்டுக்கள், புதிர் போட்டிகள் போன்ற கடைகளுக்கும், பிற நிகழ்ச்சிகளுக்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்க அதிகாரிகள் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். மீறி கூட்டம் கூடினால் பெரும் தொகை அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.