விளையாட்டு

T20 World Cup: நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை

57views

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. நேற்று (அக்டோபர் 18) 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் 4வது லீக் போட்டியில், ‘A’ பிரிவில் இலங்கை – நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, நமீபியா அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீபன் பார்ட் மற்றும் ஜேன் கிரீன் ஆகியோர் களமிறங்கினர்.

ஸ்டீபன் பார்ட் 7 ரன்னிலும், கிரீன் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களமிறங்கிய வில்லியம்ஸ் மற்றும் ரஸ்மூஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸ்மூஸ் 20 ரன்னிலும், வில்லியம்ஸ் 29 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 13.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!