441
இந்தியாவில் எத்தனையோ அரசிகள் ஆண்டனர், இது பெண்களை சரிக்கு சமாக நடத்திய நாடு.
தென்னக ருத்திரம்மா, மங்கம்மா, அப்பக்கா, வேலுநாச்சியார் போல வடக்கே நாயகி தேவி, சென்னம்மா, லட்சுமிபாய், அவந்திபாய் என பெரும் வரிசை உண்டு.
இந்திய வரலாறு மிக மோசடியாக எழுதபட்டு வெள்ளையனை எதிர்த்த லட்சுமிபாயும் வேலுநாச்சியாரை யும் சொன்னதே அன்றி ஆப்கானியரை எதிர்த்த இந்திய அரசிகளை பற்றி சொல்வதே இல்லை, அது ஏன் என்றுதான் தெரியவில்லை.
முகமது கோரியினை எதிர்த்த நாயகி தேவி போல அக்பர் எனும் ஜலாலுதீனை எதிர்த்தவர் ராணி துர்காவதி.
1524ல் மத்திய பிரதேச உத்திரபிரதேச எல்லையில் இருந்த கோண்ட்வானா நாட்டின் ராணி அவர், அவருக்கு முன் அவர் கணவன் டல்ப்ட்ஸ் ஆண்ட நாடு அது.
ஆனால் முதல் குழந்தைக்கு 5 வயதானபொழுது கணவன் இறந்துவிட ஆட்சிக்கு வந்தவர் ராணி துர்காவதி.
அவர் காலத்தில் அதாவது 1550-1560 களில் ஹூமாயுனுக்கு அடுத்து இந்தியாவினை ஆள ஷெர்ஷாவும் அக்பர் ஜலாலுதீனும் கடும் போர் புரிந்து கொண்டிருந்தார்கள்.
இருவருக்கும் அடங்காமல் தன் நாட்டை தனி நாடாக வைத்திருந்தார் ராணி துர்காவதி.
அக்பர் ஜலாலுதீன் அரசுக்கு வந்தபின் துர்காவதியின் கோண்ட்வானா நாட்டை பிடிக்க தன் தளபதி அசப்கானை அனுப்பினார்.
அவனுக்கு பெரும் ஆச்சரியம் கொடுத்தார் ராணி துர்காவதி.
அப்சல்கான் கப்பம் கோரி அடிமையாக இருக்க அனுப்பிய ஓலைக்கு போர்களத்தில் சந்திப்போம் என பதிலனுப்பினார் ராணி துர்காவதி.
அப்சல்கான் பெண் என்றும் பாராமல் களத்துக்கு வந்தான்
மிகப்பெரிய போர் மூண்டது தன் வியக்க வைக்கும் சாதுர்ய வியூகத்தால் அப்சல்கானை வென்றாள் துர்காவதி, ஆனால் சென்றவன் திரும்புவான் எனும் அச்சம் இருந்தது
இரவோடு இரவாக அவன் பாசறையினை தாக்கி அவன் தலையினை துண்டிக்க தன் தளபதிகள் சொன்ன ஆலோசனை அறத்துக்கு புறம்பான கோழைதனம் என மறுத்தாள் ராணி.
அவள் எதிர்பார்த்தபடியே பெரும் படைதிரட்டி அடிபட்ட புலியாக வந்தான் அப்சல்கான்.
ஆனால் துர்காவதி துணிச்சலாக போரிட்டு பெரும் சேதம் ஏற்படுத்தினாள், எனினும் மொகலாயரின் தந்திரமான அம்பு எறியும் படை அவள் கழுத்துக்கு அம்பினை செலுத்தியது
அந்நிலையிலும் போராடினாள், அந்த பெண்புலியின் இறுதி நிமிடங்களிலும் அவள் வாள் அந்நியரை கொன்று கொண்டே இருந்தது
வழியும் ரத்தத்துடன் அவளை அவள் படைகள அப்புறபடுத்தின, மயக்கம் தெளிந்ததும் மறுபடியும் களத்துக்கு வந்தாள் துர்காவதி
அந்நிலையில் வெற்றி சாத்தியமில்லை என தெரிந்ததும் தன் குறுவாளால் தன்னை கொன்று அந்நியரிடம் சிக்காமல் உயிர்விட்டாள் அந்த வீரமகாராணி
அக்பர் மாவீரன் என்றும், மாமனிதன் என்றும், பெண்களை தெய்வமாய் மதித்தவன் இந்து பெண்களை மணந்த பெருந் தன்மையாளன் என்றெல்லாம் இங்கு வரலாறு உண்டு
ஆனால் இந்திய பெண்புலி அவனை ஓட அடித்ததும் , வஞ்சகமாக அவள் களத்தில் கொல்லபட்ட கொடுமை பற்றியெல்லாம் யாரும் பேசமாட்டார்கள், வரலாற்றிலும் இது கிடையாது
ஏன் என்றால் இங்கு எழுதபட்ட ஒரு சார்பு வரலாறு அப்படி
ராணி துர்காவதி இன்று அந்த பெண்புலி பிறந்த நாள், இந்திய பெண்களின் வீரத்தின் அடையாளமாக நின்ற அந்த வீரபெண்மணிக்கு வீரவணக்கம்.
-
கோமதி,காட்பாடி
add a comment