சினிமா

சமூக அக்கறை கொண்ட படமாக “அம்மா உணவகம்”

119views

சமூக அக்கறையும் சகமனிதன் மீது பேரன்பும் கொண்ட ராஜகிருஷ்ணா தன் இளைய மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மற்றொரு வாடகை வீட்டில் பல்வேறு கனவுகளோடு பல தரப்பட்ட மனிதர்களும் வாடகைக்கு குடி இருக்கிறார்கள். இவர்களது இயல்பு நிலைவாழ்க்கை கொரோனா பேரிடர் காலத்தில் மோசமாக பாதித்து உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இவர்களின் இலட்சியங்களும் கனவுகளும் பிரதிபலிக்கும் விதமாக எதார்த்தமான முறையில் படம்பிடித்துள்ளார் இயக்குனர் விவேகபாரதி.

வெங்கட்பிரபு கதாநாயகனாக நடித்த வசந்தம் வந்தாச்சு,
மாஸ்டர் மகேந்திரன் நடித்த என்றுமே ஆனந்தம் போன்ற படங்களை இயக்கிய விவேக பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கதையின் நாயகர்களாக இந்திரன், சசி சரத், அஸ்வின் கார்த்திக், நாயகியாக ஸ்ரீநிதி ஆகியோர் நடிக்க இயக்குனர்கள்
ஆர். வி.உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, பாத்திமா,நாட்டுப்புற கலைஞர் மன்னை ஸ்ரீமூர்த்தி,சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்ன், ஜேசுதாஸ் , ஈரமான ரோஜாவே சிவா,
நாஞ்சில் சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு -மோகன ராமன்,
இசை – எஸ்.ஷாந்தகுமார்
பாடல்கள் – டாக்டர்.கிருதியா, ஜான் தன்ராஜ், தொல்காப்பியன்
தயாரிப்பு – எம்.பி. முகமது இப்ராகீம், எஸ்.எம்.குமாரசிவம், ஆர்.அப்துல் அஜீஸ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விவேக பாரதி

மனமே மனமே கலங்காதே மனமே..என்ற தத்துவ பாடலுக்கு இயக்குனர் சுப்ரமணியம் சிவாவும்,
நம்பாதே நம்பாதே பெண்களை நம்பாதே…என்ற துள்ளல் இசை பாடலுக்கு இயக்குனர் ஷரவண சக்தியும் நடித்துள்ளனர். இதுவே படத்தின் பக்கபலமும் ஒன்று.

கொரோனா பேரிடர் காலத்தில் கடை நிலை மருத்துவ ஊழியர்கள், திரைப்பட தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் வாட்ச்மேன் வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா இப்படம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை பக்கத்தை அப்படியே சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்றும் இது வணிகரீதியாகவும் வெற்றி பெரும் என்று வாழ்த்தினார். இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், வ.கௌதமன், சுப்ரமணியம் சிவா, யுரேகா, ஷரவண சக்தி மற்றும் தொழிலதிபர் சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இப்படம் விரைவில் வெளிவருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!