ஜப்பான் புதிய பிரதமடோக்கியோ-ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, 64, தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் கோவிட் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்துள்ளது. எதிர்ப்புஇதனால் ஜப்பான் பிரதமராக பதவியேற்ற ஓராண்டிற்குள் ஹோஷிஹைடி சுகாவுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. சமீபத்தில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புமியோ கிஷிடாவிடம், சுகா தோல்வி அடைந்தார்.இதையடுத்து சுகா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் பெரும்பான்மை ஆதரவுடன், புமியோ கிஷிடா வெற்றி பெற்றார். இதையடுத்து ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்துள்ளது. இதில் சுகா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 20 பேரில் இருவருக்கு மட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
புமியோ கிஷிடா, 8ம் தேதி பார்லி.,யில் உரையாற்ற உள்ளார். அப்போது அவர் பார்லி.,யை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவார் என தகவல் வெளியாகிஉள்ளது.டுவிட்டர்”கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களின் வருவாயை அதிகரித்து, நாட்டை முன்னேற்றுவதே என் லட்சியம்,” என, புமியோ கிஷிடாகூறியுள்ளார்.ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடோ பொறுப்பேற்றதற்கு, பிரதமர் மோடி ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘புமியோ கிஷிடா தலைமையில் இந்தியா – ஜப்பான் கூட்டுறவு மேலும் வலுப்பெற்று, ஆசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும்’ என, மோடி தெரிவித்து உள்ளார்.ராக புமியோ கிஷிடா தேர்வு