389
தாய்ப்பாலும் வியாபாரமாகிவிட்ட இந்த விளம்பர உலகத்தில் பெண்களை காட்சிப்பொருளாக வைத்து பெரும்பான்மையான விளம்பரங்கள் வெளிவருகின்றன.
ஒரு குறிப்பிட்ட வாசனைத்திரவியத்தை ஆண் பயன்படுத்தினால் அந்த வாசனையில் பெண்கள் மயங்கி அவனிடம் செல்வது போல சித்தரிக்கும் விளம்பரம்.ஆணின் உள்ளாடை விளம்பரத்திற்கும் பெண்களை காட்சி பொருளாக்கியிருப்பார்கள்.லுங்கி விளம்பரத்திற்கும் பெண்கள்.ஒரு இருசக்கர வாகன விளம்பரத்தில்,அந்த இருசக்கர வாகனத்திற்கு மயங்கி பெண்களெல்லாம் அந்த வாகனத்தின் பின்னே ஓடுவதைப்போன்ற காட்சி.சோப் விளம்பரத்தில் இந்தப் பெண்கள் ஏன்தான் இவ்வளவு விரசமாக நடிக்கிறார்களோ?..பெண்களுக்கான இருசக்கர வாகன விளம்பரத்தில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் வாகனத்தை ஓட்டுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
சாக்லேட்,மொபைல்,கார் ,நகை போன்ற விளம்பரங்களில் அந்த பொருளுக்கே பெண்கள் மயங்குவது போன்ற கேவலமான காட்சியமைப்பு.எல்லா விளம்பர வியாபாரிகளும் பெண்களை இப்படி காட்சிப்பொருளாக பயன்படுத்துகிறார்களே…..அந்த விளம்பரங்களில் அவர்கள் வீட்டு பெண்களை நடிக்க வைப்பார்களா?பெண்கள் அவ்வளவு கீழ்த்தரமானவர்களா? பலவீனமானவர்களா?இரண்டு மணிநேரம் ஓடும் திரைப்படத்திற்கே தணிக்கைத்துறையின் ஒப்புதல் பெறவேண்டியிருக்கிறது.
இருபத்துநாலுமணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் விளம்பரங்களை தணிக்கைத்துறை கண்டுகொள்ளாதது ஏன்?குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் உணவுப்பொருட்களின் விளம்பரம்…..இப்படியான விளம்பரங்களில் நடிக்கும் பெண்களுக்கு சிறிதும் சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.எவ்வளவு கேவலமான உடை கொடுத்தாலும் அணிந்து நடிக்கிறார்கள்.அவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் போல.
ஐய்யா ஊடக வியாபாரிகளே..உங்கள் வீட்டில் பெண்களே இல்லையா?நீங்கள் பணம் சம்பாதிக்க பெண்களை ஏன் காட்சிப்பொருளாக்க வேண்டும்?இப்படியான விளம்பரங்களைப் பார்க்கும்போது ஏனோ அப்படி ஒரு கோபம்.இதையெல்லாம் எப்படி,யார்மூலம் சரி செய்வது அல்லது முறைப்படுத்துவது.செல்லரித்துப்போன ஊடக வியாபாரிகளின் கேவலமான சிந்தனைகளை மாற்றுவது எப்படி சாத்தியமாகும்? எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக சரிநிகர் சமானமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.சிகரம் தொடும் மகளிரைப்பார்த்து உவகையால் பூரிக்கிறோம்.விண்வெளியிலும் வாகைசூடும் பெண்மை நம்மை பிரம்மிக்க வைக்கிறது.
பெண்மையை இழிவுபடுத்துவதை பெண்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.பெண்களின் சக்தி அளப்பறியது.அதை முறையாகப் பயன்படுத்தி சிகரம் தொடுவோம்…..!!!
-
கோமதி, காட்பாடி
அருமை அருமை,
அருமையான கட்டுரை கோமதி மேடம், வாழ்த்துக்கள் 🙏
வாவ் சூப்பர் ஆனாலும் அது காட்சிப் பொருள் அல்ல பெண்கள் அழகானவர்கள் என்பதால்