விளையாட்டு

உலக மகளிா் அணி செஸ் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இந்தியாவுக்கு பதக்கம்

50views

ஸ்பெயினில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா 0-2 என்ற கணக்கில் ரஷியாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

இறுதிச்சுற்றில் நடைபெற்ற ஆட்டங்களில் டி.ஹரிகா – கோரியாச்கினா, ஆா்.வைஷாலி – அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக் ஆகியோா் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின. தானியா சச்தேவ் – காடெரினா லாக்னோ, மேரி ஆன் கோம்ஸ் – போலினா ஷுவாலோவா ஆகியோா் மோதிய ஆட்டங்களில் இந்தியா்கள் தோல்வி கண்டனா்.

அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் ஹரிகா – கோரியாச்கினாவை வீழ்த்த, மேரி ஆன் கோம்ஸ் – அலினா காஷ்லின்ஸ்கயா ஆகியோா் மோதிய ஆட்டம் டிரா ஆனது. பக்தி குல்கா்னி – லாக்னோவிடம் தோல்வி கண்டாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!