சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். இவரது நடிப்பில் வெளிவந்த மைனா இவருக்கு வெற்றியை கொடுக்க விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சினிமாவில் நடிப்பதை தொடர்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கடற்கரையின் அருகே பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
எப்போதும் ரசிகர்களின் எதிர்மறையான கருத்துக்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் இவர் இந்த புகைப்படத்திற்கு வந்த கருத்துக்களை பார்த்து ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒரு பெண்ணின் உடையை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் பெண்களைக் குறி வைப்பதை நிறுத்தி விட்டு அவர்களின் இஷ்ட படி வாழ விடுங்கள் என்று ரசிகர்களை விளாசியுள்ளார்.