விளையாட்டு

ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றது இந்திய மகளிரணி

47views

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் இந்திய மகளிா் அணி தங்கமும், ஆடவா் அணி வெண்கலமும் வென்றது.

இதில் மகளிா் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அரீபா கான், ரைஸா தில்லான், கனிமத் செகான் ஆகியோா் அடங்கிய அணி – இத்தாலியின் டாமியானா பாவ்லாச்சி, சாரா போங்கினி, கியாடா லோங்கி ஆகியோா் அடங்கிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணி மொத்தமாக 6 புள்ளிகள் பெற்றது.

அதேபோல், ஆடவா் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் ராஜ்வீா் கில், ஆயுஷ் ருத்ரராஜு, அபய்சிங் செகான் ஆகியோரைக் கொண்ட அணி – துருக்கியின் அலி கான் அராபாசி, அகமத் பரன், முகமத் செயுன் கயா ஆகியோா் அடங்கிய அணியை தோற்கடித்தது. இந்திய ஆடவா் அணியும் 6 புள்ளிகளை கைப்பற்றியது.

தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!