ஐபிஎல் தொடரில் 45-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது எடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வீரர்களான வெங்கடேஷ் ஐயர் – சுப்மன் கில் களம் இறங்கினார்கள். சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி உடன் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திரிபாதி 37 ரன்னிற்கும், மோர்கன் 2 ரன்னில் வெளியேறினார். ரானா 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 165 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் – கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் அணி 70 ரன்களை எடுத்திருந்தபோது மயங்க் அகர்வால் 40 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து நிக்லோஷ் பூரான், எய்டன் மக்ரம், தீபக் ஹோடா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் கேப்டன் கேஎல் ராகுல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.
பஞ்சாப் அணி ரன்களை குவிக்க தொடங்கியதும், கொல்கத்தா அணி பந்து வீச்சில் கவனம் செலுத்தியது. அதையடுத்து ரன்கள் குறைய தொடங்கியது. கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் பவுண்டரி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். பஞ்சாப் வழக்கம் போல் இறுதியில் சொதப்பியது. ஆனால் பஞ்சாப் பேட்ஸ்மேன் ஷாருக்கான் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.