சினிமா

தீவிர சிகிச்சை பிரிவில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் – பின்னணி என்ன?.

60views

லத்திகா திரைப்படம் மூலம் நடிகரானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இப்படத்தை சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் நீண்ட நாட்கள் பணம் கொடுத்து ஓட்டு வைத்த பெருமை இவருக்கு உண்டு. அதன் பின் சில படங்களில் நடித்தார்.

நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலமே இவர் பிரபலமானார். சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமடைந்தார். அப்படத்திற்கு பின் அவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆனார். ஆனால், மோசடி புகாரில் சிக்கினார்.

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தருவதாக கூறி கமிஷன் பெற்றுவிட்டு அவர் மோசடி செய்ததாக அவர் மீது புகாரளிக்கப்பட்டது. மேலும்,செக் மோசடி புகாரிலும் சிக்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒருவழியாக விடுதலை ஆகி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக ‘பிக்கப்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று ஒரு படப்பிடிப்பில் இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் படக்குழுவினர் அனுமதித்தனர். அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!