டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ரூபிந்தர் பால் சிங் தனது ஓய்வை அறிவித்தார்.
1980-க்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற இந்திய அணியில் இருந்த இந்திய ஹாக்கி வீரர் ரூபிந்தர் பால் சிங் இளைஞர்களுக்கு வழி வகுக்கும் முயற்சியாக சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 30 வயதான ரூபீந்தர் இந்தியாவுக்காக 223 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டி, 2016 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளை இந்திய அணி வென்றபோது அந்த அணியில் அவர் இடம் பெற்றிருந்தார். 2018-ல் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம்பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார்.
ரூபிந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ஹாக்கி அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எனது முடிவை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த சில மாதங்கள் என் வாழ்க்கையில் மிகச் சிறந்தவை. வாழ்நாள் முழுவதும் டோக்கியோவில் எனது குழுவுடன் மேடையில் நின்ற அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. கடந்த 13 ஆண்டுகளாக நான் இந்தியாவுக்காக விளையாடும் போது அனுபவித்து வருகிறேன்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில் ரூபிந்தர் பால் சிங்கும் ஒரு கோல் அடித்தார். அவர்கள் தவிர, சிம்ரஞ்சித் சிங் இரண்டு கோல்களை அடித்தார், ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்பிரீத் சிங்கும் தலா ஒரு கோல் அடித்தனர் என்பது குறிப்பித்தக்கது.