ராணுவத்துக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடி பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.’இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து, 165 கோடி ரூபாய்’ என, தெரிவிக்கப்பட்டது. இதில், ஹெலிகாப்டர்களுக்கு 3,850 கோடி ரூபாயும், வெடி பொருட்களுக்கு 4,962 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பில், 11 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கான உபகரணங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகின்றன.
139views
You Might Also Like
பக்திக்கு வயது முக்கியமில்லை,116 வயதில் திருப்பதி -. திருமலை மலை ஏறி சாதனை செய்த சென்னை நவநீதம்மாள்
ஆந்திர மாநிலம் திருப்பதி - திருமலையில் உள்ள ஸ்ரீவாரி பெருமாளை கால்நடையாக சென்று தரிசனம் செய்ய சென்ற சென்னையை சேர்ந்த 116 வயது முதாட்டி நவநீதம்மாள் 3550...
திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு பெருமாளின் கருடசேவை
திருப்பதி திருமலையில் ஆனி மாதம் பெளர்ணமி முன்னிட்டு ஸ்ரீவெங்கடேச பெருமாள் நான்கு மாடவீதிகளில் கருடவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு திங்கள் இரவு அருள்பாலித்தார். கே.எம். வாரியார்...
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்
திருப்பதி திருச்சானூரில் நடைபெற்றுவரும் வருடாந்திர தெப்ப உற்சவத்தின் ஒரு பகுதியாக பத்ம சரோவரத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் 3 முறை வலம் வந்து ஸ்ரீபத்மாவதிதேவி மூன்றாம் நாள்...
ஐதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பிறந்தநாள் முன்னிட்டு நினைவிடத்தில் மரியாதை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முன்னாள் ஆந்திரபிரதேச மாநில முதல்வர் நந்தமுரி டாரகா ராமாராவ் (NTR) 103-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரின் பேரன் சினிமா நடிகர் ஜூனியர்...
பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வருக்கு வரும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கீடு
கேரளாவில் கடந்த வாரம் காங்கிரஸ் முதல்வர் சதீஷன் புதியதாக பதவி ஏற்றார். வரும் 26-ம் தேதி செவ்வாய்கிழமை புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம்...




