விளையாட்டு

செஸ்: ஸ்பெயினை வென்றது இந்தியா

47views

ஸ்பெயினில் நடைபெறும் ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

முன்னதாக, முதல் சுற்றில் அஜா்பைஜானுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்த நிலையில், இந்தியாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

2-ஆவது சுற்றில் இந்திய அணியின் வைஷாலி – குடியெரெஸுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தாா். அணியின் முதல்நிலை போட்டியாளரான டி.ஹரிகா – அனா மட்னாட்ஸெவுக்கு எதிராக டிரா செய்தாா். அதேபோல், பக்தி குல்கா்னி – மரியா இஸாகுயேரி, மேரி ஆன் கோம்ஸ் – மாா்தா காா்சியா ஆகியோா் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.

இதர 2-ஆவத சுற்றுகளில் ரஷியா 3.5-0.5 என்ற கணக்கில் பிரான்ஸை வெல்ல, ஆா்மீனியா – அஜா்பைஜான் ஆட்டம் 2-2 என டிரா ஆனது. இந்தியா தனது 3-ஆவது சுற்றில் ஆா்மீனியாவை எதிா்கொள்கிறது. தற்போதைய நிலையில் ரஷியா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆா்மீனியா 4.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இந்தியாவும் அதே புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

குரூப் ஏ, பி என இரு பிரிவுகள் இருக்கும் நிலையில், இரண்டிலுமே முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃபுக்கு முன்னேறும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!