92
அன்று மாலை மருத்துவர்களின் பரிந்துரை படி வீட்டிற்கு சரவணன் வருகிறார்.
மருத்துவர் சொன்ன அனைத்து விஷயத்தையும் வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்லி எச்சரிக்கை செய்கிறான் செழியன்.
அவருக்கு எந்தவித அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தையும் சொல்லவே கூடாது என்று அனைவருக்கும் எச்சரிக்கிறான்.
சரவணனிடம் செழியன் “நீங்கள் கொஞ்சநாள் ஓய்வெடுங்கள்…. கடையை நான் ஒரு ஆள் வைத்து பார்த்துக் கொள்கிறேன். வேலை முடித்துவிட்டு வந்த மீதமான நேரங்களில் நானே கடையை பார்த்துக் கொள்கிறேன்.
அதனால் நீங்கள் ஓய்வு எடுத்தால் மட்டுமே உங்கள் உடல்நிலை பழைய மாதிரி ஆகும்.”
“சரி செழியா !!! நீ சொல்வது போல கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கிறேன். பிறகு நானே கடையை பார்த்துக் கொள்கிறேன்.”
“சரி அப்பா இப்போது உங்களுக்கு தேவையான உணவு எடுத்து வருகிறேன். சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைகளை போட்டு ஓய்வெடுங்கள். “
சரவணனுக்கு தேவையான உணவை எடுத்து வந்து அவனே கொடுத்துவிட்டு மாத்திரைகளை போட வைத்த விட்ட பின்னர் அவனது அறைக்கு செல்கிறான்.
இவன் இல்லாத இந்த மூன்று நாட்களில் ரத்னாவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.
செழியனை பார்க்காத ஏக்கம் அவளுக்கு அதிகமாக இருந்தது.
தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவள் அப்பா………அப்பா………என்று உளறிக் கொண்டிருக்கிறாள்.
அவனது குழந்தையை மடியில் தூக்கி படுக்க வைத்து விட்டு “அப்பா வந்து விட்டேன் பாருங்கள்….”
என்றதும் குழந்தை கண் திறந்து செழியனை அறை அணைத்துக் கொண்டாள். இறுக்கமாக.
“அப்பா எங்கே???” போயிருந்தாய் எத்தனை நாள். நான் உன்னை பார்க்கவே இல்லை தெரியுமா…..”
என்று கேட்க???
“அப்பா வந்துட்டேன் பாப்பா இனி போக மாட்டேன் உன் கூடத்தான் இருப்பேன் சரியா….”
என்று சொல்லி குழந்தையை தூங்க வைக்கிறான்.
அதே நேரத்தில் என்ன விஷயம் என்று புரியாமல் இருந்த கார்குழலி தொலைபேசியில் இரவு நேரத்தில் அழைத்து கொண்டே இருந்தாள் செழியன் எண்ணிற்கு.
செழியனோ அருகில் தேவி இருப்பதால் அழைப்பைத் துண்டித்து கொண்டே இருக்கிறான்.
இதைப் பார்த்த தேவி “ஏன்? அழைப்பை எடுக்காமல் துண்டி கிறீர்கள்???”
என்று கேட்க?
“ஒருவன் என்னிடம் கடன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். நான் அந்த அழைப்பை எடுத்தால் மறுபடி என்னிடம் கேட்பான் அதனால்தான் அழைப்பை தவிர்க்கிறேன்.”
“சரிங்க தூங்குங்க நேரம் ஆகிறது. சரியாக தூங்காமல் இருந்திருப்பீர்கள்.நன்றாக ஓய்வு எடுங்கள். அப்போதுதான் நாளை அலுவலகத்திற்கு செல்ல முடியும்.”
“சரி நீயும் தூங்கு” என்று சொல்லி செழியன் தூங்காமல் தன் மனைவிக்கு துரோகம் செய்து விட்டதை நினைத்து தவிக்கிறான்.
அடுத்த நாள் காலை அலுவலகத்தில் செழியனை சந்தித்த கார்குழலி அனைத்து விஷயத்தையும் தெரிந்து கொள்கிறாள்.
பின்பு செழியன் “கொஞ்ச நாட்களுக்கு நாம்இருவர் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமில்லாமல் ஒன்றாக எங்கும் வெளியில் செல்ல வேண்டாம்.”
“ஏன் திடீரென்று இப்படி சொல்கிறீர்கள்.”
“நம் விஷயம் வீட்டில் தெரிய கொஞ்ச நாட்கள் ஆகும். அதுவரை இப்படியே தான் தொடர வேண்டும் .
அதுதான் நமக்கு நல்லது.”
“சரி நானும் அதை அதை அப்படியே செய்கிறேன்.”
இவர்களுக்குள் இப்படியே சில காலம் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொண்டு செல்கின்றனர்.
மீண்டும் சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment