இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து வரும் பறவைகளை இறக்குமதி செய்ய ஓமன் அரசு தடை விதித்துள்ளது.
ஓமன் நாட்டின் வேளாண்மை, மீன் மற்றும் நீர் வள அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்தும் பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பிராந்தியத்தில் இருந்தும் பறவைகளை ஓமன் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும். குறிப்பாக இந்த பகுதியில் இருந்து பறவைகள் மட்டுமின்றி அது சார்ந்த பொருட்களும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு கால்நடை பராமரிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.