சீனா விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும் வகையில், ஆளில்லா சரக்கு விண்கலம் தியான்ஜோ-3 நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் நிரந்தர விண்வெளி நிலையத்தை உருவாக்கும் வகையில், தியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை சீனா அமைத்து வருகின்றது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் விண்வெளி நிலையம்அமைப்பதற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தியான்ஜோ-3 என்ற ஆளில்லா சரக்கு விண்கலத்தை சீனா விண்ணில் ஏவியது. தெற்கு ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள வென்சாங் விண்வெளி தளத்தில் இருந்து இந்த விண்கலம் நேற்று ஏவப்பட்டது. மார்ச்-7 ஒய்4 என்ற ராக்கெட்டானது இந்த ஆளில்லா சரக்கு விண்கலத்தை சுமந்து வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில்நிலைநிறுத்தப்பட்டது.