இந்தியா

மாநிலங்களவைத் தேர்தலுக்கு பின் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: வேட்பாளர்கள் செலவுத் தொகை உயர்வு; முதன் முறையாக நோட்டாவும் அறிமுகம்

67views

புதுச்சேரியில் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வுள்ளது. முதன் முறையாக மின் னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவும் உள்ளாட்சித் தேர்தலில் அறிமுகமாகிறது. வேட்பாளர்கள் செலவுத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக நகராட்சி, கொம்யூன் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் விரைவுப்படுத் தியுள்ளது. வார்டு வரையறை, வாக்காளர் பட்டியல், இடஒதுக்கீடுவாரியாக வார்டுகள் ஒதுக்கீடு செய் யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வார்டு வரையறையில் குளறுபடி இருப்பதாக அரசியல் கட்சிகள், எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுவரை இருமுறை மட்டுமே புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபருக்குள் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உறுதியாக நடவ டிக்கை எடுத்து வருகிறது. வரும்மாநிலங்களவைத் தேர்தலுக்குபிறகு மாநில தேர்தல் ஆணை யமானது உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர்களுக் கான செலவினத் தொகையையும் மாநில தேர்தல் ஆணையம் பல மடங்காக உயர்த்தி அறிவித் துள்ளது. இதன்படி கிராம பஞ் சாயத்து வார்டு உறுப்பினர் ரூ.25 ஆயிரமும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.2.50 லட்சம்செலவு செய்யலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வரை செலவழிக்கலாம். புதுவை நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சமும், உழவர்கரை நகராட்சி பதவிக்கு ரூ.35 லட்சமும், காரைக்கால் நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.14 லட்சமும், மாகே, ஏனாம் நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 லட்சமும் செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செலவின தொகையை அதிகரிக்கும் வகையில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

வரும் உள்ளாட்சித்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா முதன் முறையாக புதுச்சேரியில் அறிமுக மாகவுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கெனவே 1,100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன.அதையடுத்து தெலங்கானாவி லிருந்து 2 ஆயிரம் இயந்திரங்கள் வந்தன.

விரைவில் 1,500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடகத்திலிருந்து வரவுள்ளது. இந்த இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தேர்தல் ஆணையம் தேவையான இயந்திரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித் தால் கூடுதலாக இயந்திரங்களும் தரத் தயாராக உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!