97
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல குழந்தையை பார்த்து வருகிறான்.
அப்போது மருத்துவர்கள் தேவியையும், குழந்தையையும் பரிசோதித்து விட்டு இருவருமே நலமாக இருக்கிறீர்கள் அதனால் இன்று மாலையே வீட்டிற்கு செல்லலாம். நான் கொடுக்கும் சத்து மாத்திரைகளை மட்டும் மூன்று மாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேவிக்கு மருத்துவர் சொல்கிறார்.
இன்று ஒரு நாள் மட்டும் கடைக்கு போகாமல் தன் குழந்தையோடு அந்நாளை கழிக்க வேண்டும் என எண்ணினான்.
அதன்படி அன்று மாலைவரை குழந்தையோடு அவன் நாட்கள் கழிந்தது.
மாலையில் வீட்டிற்கு போகும் நேரம் வந்ததும், அவனும் சேர்ந்தே அவளுடன் செல்கின்றான்.
தேவியின் வீட்டிற்கு சென்றதும் வாசலிலேயே மூவருக்கும் திருஷ்டி கழிக்க பட்டு வீட்டிற்குள் செல்கின்றனர்.
வீட்டிற்கு வந்த மருமகனுக்கு உணவு உபசரிப்பு நடக்கிறது.
தேவியும் அவளது கணவனும் இப்போதுதான் இருவரும் தனிமையாக பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.
“போனது போகட்டும் . இனிமேல் நமக்குள் எந்த மனக்கசப்பும் வராமல் நாம் இருவரும் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய குழந்தையின் எதிர்காலத்தை கருதி நாம் இனி அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்” என்று செழியன் கூற அதற்கு தேவியும் “சரிங்க நீ அப்படியே நடந்து கொள்கிறேன்” என்று சொல்கிறாள்.
“உன் உடல்நிலை எப்படி இருக்கிறது??”
என்று தேவியின் கைபிடித்த கேட்கிறான்.
“இப்ப நல்லா தான் இருக்கேன். எவ்வளவு பெரிய வலியாய் இருந்தாலும் என் பிள்ளை முகம் பார்த்ததும் எனக்கு அது ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.” என்று கூறிய கணவன் மடியில் சாய்கிறாள்.
அவளது தலையை வருடி விடுகிறான்.
தன் உயிரையே தன் கண் முன்னே தன் குழந்தையாய் காட்டியவள் இனி அவளை ஒரு போதும் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் செழியனுக்கு உருவாகிறது.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
👌