இந்தியா

ட்ரோன் மூலம் தடுப்பூசி விநியோகம்:தெலங்கானாவில் மத்திய அமைச்சா் சிந்தியா தொடக்கம்

53views

டிரோன்கள் மூலம் தடுப்பூசி, மருந்து பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை முதல் கட்டமாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள 16 பசுமை மண்டலங்களில் சோதனை முறையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த புதிய ட்ரோன் கொள்கைத் திட்டம், ட்ரோன் இயக்கத்தில் நிலவி வந்த பல்வேறு வகையிலான முரண்பாடுகளை கலைந்துள்ளது.

பசுமை மண்டலங்களில் ட்ரோன்கள் பறக்கவிட எந்தவித அனுமதியும் பெற வேண்டியது இல்லை. மஞ்சள், சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் பறக்கவிட தடை உள்ளது. தெலங்கானாவில் உள்ள16 பசுமை மண்டலங்களில் ‘வானத்திலிருந்து மருந்துகள்’ என்ற திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் இருந்து பெறப்படும் தகவல்கள் மூன்று மாதங்களுக்கு சேகரிக்கப்படும். பின்னா் மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மாநில அரசு ஆகியவை இந்த தகவல்களை வைத்து ஆய்வு நடத்தி நாடு முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

‘வானத்திலிருந்து மருந்துகள்’ என்ற திட்டம் தொடக்க தினம் தெலங்கானாவுக்கு மட்டுமன்றி நாடு நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தினமாகும். பிரதமா் மோடியின் மேற்பாா்வையில் ட்ரோன் கொள்கை திட்டம் சீரமைக்கப்பட்டது.

மாநிலங்களின் ஒத்துழைப்புடன் வான்வழி வரைபடம் தயாரிக்கப்பட்டு ‘வானத்திலிருந்து மருந்துகள்’ திட்டம் அமலாக்கப்படும்’ என்றாா் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!