கர்நாடக அரசு 5 நாட்கள் விநாயகர் சதுர்ச்சி விழாக்களை நடத்த அனுமதித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பெங்களூருவி ல் பொது இடங்களில் மூன்று நா ட்கள் மட்டுமே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட ங்களை நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பிரகத் பெங்களூரு மஹாநகர பலிகே (பிபிஎம்பி) தலைமை ஆணையர் கவுரவ் குப்தா “பெங்களூரு நகரில் மூன்று நாட்களுக்கு மேல் விநாயகர் திருவிழா கொண்டாட அனுமதிக்கப்படாது. சிலையை கொண்டு வரும்போது அல்லது மூழ்கசெய்யும் விழாவின் போது எந்த ஊர்வலமும் கூடாது” என்று கூறினார்.
மேலும், ” பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் நிறுவப்பட்ட சிலைகள் வீட்டில் அல்லது நம் மொபைல் டேங்கில் மூழ்கடிக்க வேண்டும். பொது இடங்களில் நிறுவப்படும் விநாயகர்கள் நான்கு அடி உயரத்தில் இருக்க வேண்டும். அவற்றையும் நமது மொபைல் டேங்குகளில் மூழ்க வேண்டும். நாங்கள் மூழ்கும் தொட்டிகளையும் உருவாக்குகிறோம். ஏரிகளில் சிலைகளை மூழ்கடிப்பதை தடை செய்துள்ளோம். கடந்த ஆண்டும் பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா மூன்று நாட்களுக்கு அனுமதித்தது. அது இந்த ஆண்டும் தொடரும்’ என்று குப்தா கூறினார்.