நிகழ்வு

வ.உ.சி 150 ஆவது பிறந்த தின தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

172views
பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டு முயற்சியில் வ.உ.சி 150 ஆவது பிறந்த தின தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது..
விழாவில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கமலாதேவி யோகராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் திரு.யோகராஜ் வரவேற்றுப் பேசினார். வ. உ. சி அவர்களின் கொள்ளுப்பேத்தி தலைமை ஆசிரியை திருமதி. மரகதவள்ளி பழனியப்பன் வ. உ. சி யின் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக R. சங்கர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், மணியாச்சி, N. முத்துராமன், காவல்துறை ஆய்வாளர், ஓட்டப்பிடாரம், மருத்துவர் பிரிடா ராயன், லயன் ஆ. கணேசன் மற்றும் எழுத்தாளர் ஜோல்னா ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்… நிகழ்ச்சியை தோழர் இராகவேந்திரன் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை ஓட்டப்பிடாரம் ஜாய் அரிமா சங்க தலைவர் தங்கராஜ், செயலர் திருப்பதி, பொருளர் சுப்ரமணி ஆகியோருடன் இணைந்து தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர். விழாவில் வ.உ.சி விளையாட்டுக் கழக செயலர் வீரபாண்டியன், தலைவர் சாமுவேல் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!