புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு… சீனாவில் தொலைக்காட்சி தொடர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. சீனாவில் அதிபர் ஜிபிங்க் தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் முதல் கட்டமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்த அரசு தற்போது தொலைகாட்சி நிறுவனங்களுக்கு கட்டுபாடுகள் விதித்துள்ளது.
குறிப்பாக ஆண்கள் பெண்கள் போன்ற பாவனைகளில் வருவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாதெனவும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்த கூடாதெனவும் தொலைகாட்சி மற்றும் ரேடியோ நிறுவனங்களுக்கு சீன அரசு கட்டுபாடு விதித்துள்ளது.
அத்துடன் சீன பாரம்பரியத்தை வெளிகாட்டும் நிகழ்ச்சிகளை அதிக அளவு ஒளிப்பரப்பவும் கேட்டுகொண்டுள்ளது. மேலும், இந்த கட்டுபாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள சீன அரசாங்கம், ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைக்க இந்த மாதிரியான கட்டுபாடுகளை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.